For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.. சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேவியட் தாக்கல்

சசிகலாவுக்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில்சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுக்கு முதல்வராக பொறுப்பு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

சசிகலாவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் சாமி. அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கோழை என்று விமர்சிக்கிறார். இந்த நிலையில் இன்றைக்குள் ஆளுநர் தனது முடிவை அறிவிக்காவிட்டால் வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Satta Panchayathu Iyakkam to file caveat in SC

இதையடுத்து சட்டப் பஞ்சாயத்து களம் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக அதன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டிருந்தது. அதில், சசிகலாவை முதல்வராக்க சுப்பிரமணியம் சாமி துடிக்கிறார் .. நாளைக்குள் முதல்வரை முடிவு செய்யாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்கிறார். சுப்பிரமணிய சாமி. அவர் அப்படி வழக்குத் தொடுத்தால் உடனே உச்சநீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக "கேவியட்" மனுவை தாக்கல் செய்யச் சொல்லி டெல்லியிலுள்ள நமது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளோம். கேவியட் மனு தாக்கல் செய்தால், நம்முடைய கருத்தையும் கேட்டுவிட்டுத்தான் நீதிபதிகள் அவரின் வழக்கு மீது தீர்ப்பு கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப இன்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் அது வரவுள்ளது. அது வரும் வரை சசிகலாவுக்கு தமிழக ஆளுநர் பதவிபப்பிரமாண் செய்து வைக்கக் கூடாது. தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக சசிகலா தரப்பில் வழக்குத் தொடரப்பட்டால் எங்களது கருத்தைக் கேட்காமல் உத்தரவிடக் கூடாது என்று அந்த கேவியட் மனுவில் கூறப்பட்டுள்ளது.

English summary
Satta Panchayathu Iyakkam has announced that it will file a Caveat petition in the SC if Subramaniam Swamy files case against the Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X