For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைரமுத்து போட்ட பிச்சை வரிகளால் உயர்ந்த ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்? சீமான்

ஆண்டாள் விவகாரத்தில் ரஜினிகாந்தின் மவுனத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளால் உயர்ந்த ரஜினிகாந்த் ஆண்டாள் விவகாரத்தில் மவுனம் காப்பது சரியல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

ரஜினிகாந்தை நண்பராகப் பார்க்கிறார் வைரமுத்து. ஆனால் ரஜினிகாந்த் எப்படிப் பார்க்கிறார் என்பது இப்போது தெரிகிறது.

Seeman condemns Rajinikanth on Vairamuthu issue

ரஜினிகாந்த் பாடிய நான் குடிச்சது தமிழ்ப் பால், உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்கமாட்டேன் பாடல்கள் எல்லாமே வைரமுத்து எழுதியதுதான். வைரமுத்து போட்ட பிச்சை அது.

அதில்தான் இவர்கள் தங்களை உயர்ந்த நடிகர்களாக அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். இன்று வைரமுத்துவுக்கு ஒரு பிரச்சனை என்கிற உடன் வந்து நிற்க வேண்டும்.

அப்படி நின்றால் குறிப்பிட்ட சாரார் நன்மதிப்பும் வாக்கும் போய்விடும் என நினைக்கிறார் ரஜினிகாந்த். அப்படி இருக்கக் கூடாது; தர்மத்தின் பக்கமும் சத்தியத்தின் பக்கமும் ரஜினிகாந்த் நிற்க வேண்டும்.

தப்பாக பேசியிருந்தால் தப்பு என வருத்தம் தெரிவிக்கலாம். வைரமுத்து அப்படி சொல்லவில்லை. ஆண்டாள் குறித்து உயர்வாகத்தான் கூறியுள்ளார். இன்னொருவர் கருத்தை மேற்கோள்காட்டுகிறார். அவ்வளவுதான். இந்த விவகாரத்தில் வம்படியாக உணர்ச்சிகளை தூண்டுவது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு சீமான் சாடியுள்ளார்.

English summary
Naam Thamizhar Party Chief Coordinator Seeman has condemned that Rajinikanth's silence over Andal-Vairamuthu issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X