திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுகவினர் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெர்மாகோல் திட்டத்தின் மூலம் ஒரே நாளில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. சட்டசபையிலும் கூட இவரது தெர்மாகோல் திட்டம் எதிரொலித்தது.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றார். திராவிட இயக்கமான அதிமுக இந்தி திணிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார்.

ஜெ.வும் எதிர்த்தார்

ஜெ.வும் எதிர்த்தார்

அதேநேரத்தில் இந்தியை படிக்க விரும்பும் மக்கள் படித்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கூட இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள்

ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள்

திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள் என்றார். மேலும் திமுகவினர் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திமுகவினரிடையே சலசலப்பு

திமுகவினரிடையே சலசலப்பு

விரைவில் தேர்தல் வரும் திமுக ஆட்சிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Selur Raju has said that if the DMK comes to power, Raudies will rule. He also said that they will occupy the waters resource like pools.
Please Wait while comments are loading...