For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன உளைச்சலை ஆளுநருக்கு அனுப்புங்கள்- கமல் ஹாசன்

தமிழக மக்கள் தங்களது கருத்துக்களை ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப கமல் வேண்டுகோள் விடுத்திருப்பதற்கு சமூகவலைதளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்கள் தங்களது கருத்துக்களை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். திமுகவினர் செய்த கடும் அமளிக்கு பிறகு அவர்களை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதனிடையே சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.

send your email's to governor, says kamalhassan

மேலும் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது "[email protected] என்ற மின்னஞ்சலுக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலாக அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது சட்டப்பேரவை அல்ல. ஆளுநர் வீடு" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல். இதற்கு திரையுலகினர் உள்பட பலரும் கமல் டுவிட்டை ரீ-ட்வீட் செய்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

English summary
send your email's to tamilnadu governor Vidyasagar Rao, says kamalhassan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X