பாலியல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! - ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாலியல் புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பல இடங்களில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, ஒருசில ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

Sexual harrassment: Sengottaiyan warns teachers

அதனால், பாலியல் புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆசிரியர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த அம்மாபேட்டையில் உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியர் புகார் எழுந்தது. எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sengottaiyan has warned teachers for the sexual harassment.
Please Wait while comments are loading...