மெரினாவில் சிவாஜி கணேசன் சிலை இருந்த இடத்தில் பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜிகணேசன் சிலை இருந்த இடத்தில் அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து இரவோடு இரவாக சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது. தற்போது அந்த சிலை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Sivaji fans perform Milk Abhishekam

சிவாஜி கணேசன் சிலை அகற்றத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவாஜி கணேசன் சிலை இருந்த இடத்தை அவரது ரசிகர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

சில ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்று அந்த இடத்துக்கு பாலாபிஷேகமும் செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sivaji Ganesan fans performed the Milk Abhishekam in Marina Sivaji Statue place.
Please Wait while comments are loading...