For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக தேர்தல் களத்தின் 6 'அதி பயங்கர' கோடீஸ்வரர்கள்... நம்பர் 1 'வசந்த் அன் கோ' வசந்தகுமார்!

|

சென்னை: தமிழக தேர்தல் களத்தில ஏகப்பட்ட பேர் பணக்காரர்களாக உள்ளனர். பலர் கோடீஸ்வரர்கள், பலர் லட்சாதிபதிகள். ஆனால் ஆறே ஆறு பேர் மட்டும்தான் பிரமாண்டப் பணக்காரர்களாக உள்ளனர்.

இந்த ஆறு பேரிலும் மிகப் பெரிய பணக்காரர் வசந்த் அன் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான எச். வசந்தகுமார்தான்.

வசந்த குமாரின் அண்ணன்தான் குமரி அனந்தன். பெரும் பொருட் செலவில் கன்னியாகுமரி தொகுதியை வசந்தகுமார் வாங்கியுள்ளார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

வசந்தகுமாரின் சொத்து ரூ. 283 கோடி

வசந்தகுமாரின் சொத்து ரூ. 283 கோடி

வசந்தகுமாரின் சொத்து மதிப்பு ரூ. 283 கோடி என்ற காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசையும் சொத்து மட்டும் ரூ. 98.63 கோடி

அசையும் சொத்து மட்டும் ரூ. 98.63 கோடி

வசந்தகுமாரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 98.63 கோடியாகும். அசையா சொத்துக்களின் மதிப்போ ரூ. 184.50 கோடியாகும்.

100 கோடியைத் தாண்டிய ஏ.சி.சண்முகம்

100 கோடியைத் தாண்டிய ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக் கட்சித் தலைவரும், வேலூர் தொகுதியில் பாஜக சின்னத்தின் கீழ் போட்டியிடுபவருமான ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு ரூ. 106.10 கோடியாகும். இவருக்கு பல கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 78.04 கோடி

திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 78.04 கோடி

திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு ரூ. 78.04 கோடி எனறு காட்டப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து

அடுத்த பெரும் பணக்கார்ர எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவரும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைருமான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர். இவரது சொத்து மதிப்பு ரூ. 77.69 கோடியாகும். பெரம்பலூர் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.

கார்த்திக்கு ரூ. 59.66 கோடி

கார்த்திக்கு ரூ. 59.66 கோடி

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ. 59.66 கோடி சொத்துக்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிவகங்கையில் போட்டியிடுகிறார்.

கூர்க்கில் 100 ஏக்கர் நிலம்

கூர்க்கில் 100 ஏக்கர் நிலம்

கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமாக கர்நாடக மாநிலம் கூர்க்கில் 100 ஏக்கர் நிலம் உள்ளதாம். அதேபோல ஹரியானா மாநிலம் குர்கானில் 6400 சதுர அடி பரப்பளவிலான வீடும் உள்ளதாம்.

சாருபாலா தொண்டைமான்

சாருபாலா தொண்டைமான்

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அரச குடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமானுக்கு ரூ. 57.07 கோடி சொத்துக்கள் உள்ளதாம். இவரது கணவர் ராஜகோபால் தொண்டைமான், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

பலருக்கு 10 முதல் 25 கோடி வரை

பலருக்கு 10 முதல் 25 கோடி வரை

இவர்கள் தவிர ரூ. 10 கோடி முதல் 25 கோடி வரை சொத்துக்களைக் கொண்ட வேட்பாளர்கள் பலர் உள்ளனர்.

மோகன் குமாரமங்கலம்

மோகன் குமாரமங்கலம்

சேலம் பாஜக காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலத்தின் சொத்து மதிப்பு ரூ. 24.01 கோடியாகும்.

டி.ஆர்.பாலுவுக்கு ரூ. 20.15 கோடி

டி.ஆர்.பாலுவுக்கு ரூ. 20.15 கோடி

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு ரூ. 20.15 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவிகக்ப்பட்டுள்ளது.

மணிசங்கர அய்யருக்கு ரூ.11.68 கோடி

மணிசங்கர அய்யருக்கு ரூ.11.68 கோடி

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யரின் சொத்து மதிப்பு ரூ. 11.68 கோடியாகும்.

தயாநிதி மாறனுக்கு ரூ. 10.94 கோடி

தயாநிதி மாறனுக்கு ரூ. 10.94 கோடி

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ. 10.94 கோடி என்கிறார்கள்.

அடப்பாவம் ஆனந்தன்

அடப்பாவம் ஆனந்தன்

ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பலரும் சாதாரணர்களாக உள்ளன. குறிப்பாக விழுப்புரம் சிபிஎம் வேட்பாளர் ஆனந்தனிடம் வெறும் ரூ. 1.92 லட்சம் சொத்துதான் உள்ளதாம். தென்காசி சிபிஐ வேட்பாளருக்கோ ரூ. 12.41 லட்சம் சொத்துதான் உள்ளது.

English summary
Six 'super-rich' candidates, each having assets worth over Rs 50 crore, are in the fray in the Lok Sabha polls in Tamil Nadu, with Congress nominee and businessman H Vasanthakumar topping the list at over Rs 283 crore. The assets declaration of the 1,318 candidates who have filed nominations for the April 24 polls reveal interesting details as many of them are crorepatis though there are also aspirants like CPI-M's G Anandan who has a meagre 1.92 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X