மாமியாரும், மருமகனும்.. இடையில் "புகுந்த" இன்னொருவர்.. தலையில் அம்மியைப் போட்டு கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே மாமியார் - மருமகன் இடையிலான கள்ளக்காதலில் இன்னொருவர் புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் மாமியாரைக் கொலை செய்தார் மருமகன். அவரையும், இந்தக் கொலை குறித்து போலீஸுக்குத் தெரியாமல் மறைத்து விட்ட அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்தனர். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை போலீஸார் எடுத்துள்ளனர்.

கள்ளக்காதல் கொலைகள் தொடர் கதையாகி விட்டன. எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் கொலைகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் உள்ளன. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கள்ளக்காதல் கொலையை போலீஸார் கண்டுபிடித்து இருவரை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் மாமியார். செய்தவர் மருமகன். கைதானவர்கள் மருமகனும், மகளும். அந்தக் கதையின் விவரம்:

வட்டிக்கு விட்டு வந்த கஸ்தூரி

வட்டிக்கு விட்டு வந்த கஸ்தூரி

சென்னை அருகே மாங்காடு, சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான கஸ்தூரி. வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார். அரிசியும் விற்று வந்தார். இவருக்கு ஒரு மகள். பெயர் அம்மு. அம்முவின் கணவர் பெயர் சூரியக்குமார். கடந்த 2013ம் ஆண்டு தனது வீட்டில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார் கஸ்தூரி. போலீஸார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

4 ஆண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளிகள்

4 ஆண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளிகள்

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் இருவர் சிக்கியுள்ளனர். இவர்கள் கணவன் மனைவி, கொல்லப்பட்ட கஸ்தூரியின் மகள் மற்றும் மருமகன் ஆவர். கஸ்தூரியின் மருமகன் சூரியக்குமாரிடம் நடந்த விசாரணையின்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சூரியக்குமார்தான் கொலையாளி. அவர் செய்த கொலை குறித்து தெரிந்தும் அதுகுறித்து போலீஸாரிடம் சொல்லாமல் மறைத்ததால் அவரது மனைவியும் கைதாகியுள்ளார்.

இது ஒரு முக்கோணக் கள்ளக்காதல்

இது ஒரு முக்கோணக் கள்ளக்காதல்

சூரியக்குமாருக்கும், கஸ்தூரிக்கும் வயது வித்தியாசம், உறவு பாகுபாடு இல்லாமல் கள்ளக்காதல் இருந்துள்ளது. சூரியக்குமாரோடு நில்லாமல் இன்னொருவரோடும் உறவைப் பேணி வந்துள்ளார் கஸ்தூரி. இது சூரியக்குமாருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி கஸ்தூரி கவலைப்படவில்லை. இது சூரியக்குமாருக்கு உள்ளுக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கஸ்தூரியிடம் இருந்த பணம், சொத்து அவரது கண்ணை மறைத்தது.

பணத்தால் வந்த வினை

பணத்தால் வந்த வினை

இந்த நிலையில், கஸ்தூரிக்கு இன்சூரன்ஸ் பணம் கணிசமான அளவில் வந்துள்ளது. இதை அறிந்த சூரியக்குமார் அவரிடம் சென்று தனக்கு வேன் வங்க பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் முடியாது என்று கூறி விட்டார் கஸ்தூரி. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீழே விழுந்த கஸ்தூரியின் தலையில் அம்மிக் கல் பட்டு மயங்கியுள்ளார். கோபம் தீராத சூரியக்குமார் அம்மிக் கல்லை எடுத்து தலையில் அடித்துக் கொன்று விட்டுப் போய் விட்டார்.

கணவருக்கு சாதகமாக இருந்த மகள்

கணவருக்கு சாதகமாக இருந்த மகள்

இந்தக் கொலை குறித்து பின்னர் அம்முவுக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் கணவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். போலீஸாரிடம் சொல்லவில்லை. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police has arrested a person for killing his mother in law after 4 years of probe. His wife has also been arrested for hiding the murder.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற