தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ்!
தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு 19 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தலைமை கொறடா என்ற முறையில் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் 19 எம்எல்ஏ-க்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது.
எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்எல்ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தலைைம கொறடாவின் புகாருக்கு பதில் அளிக்க கோரி அந்த 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 19 எம்எல்ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications