குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!
தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர ஆயிதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்து வந்துள்ளார்.

முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு
இந்நிலையில் குற்றாலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் நீதிபதி நேற்று வந்திருந்தார். அப்போது அவருடன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனும் வந்திருந்தார். இருவரும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

விடுதி அறையில் துப்பாக்கிச் சத்தம்
நள்ளிரவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே விடுதியில் இருந்த ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது பார்த்திபன் தங்கி இருந்த அறையில் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் வேறு வழியின்றி விடுதி ஊழியர்கள் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

துப்பாக்கியல் சுட்டு தற்கொலை
அப்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபடி பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இறந்து கிடந்த அவரது கையில் துப்பாக்கியும் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அவர் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்தனர். பின்னர், உடனடியாக குற்றாலம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவம் நடந்த விடுதிக்கு வந்த இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார், தற்கொலை செய்து கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
முன்னாள் நீதிபதியின் பாதுகாப்புக்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்? மனம் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் நீதிபதியின் பாதுகாப்புக்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், விடுதி அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications