For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 தமிழக மீனவர்களைக் கைது செய்தது இலங்கை.. தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டனர்!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி 8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து தலைமன்னாருக்குக் கொண்டு சென்றுள்ளது.

மீனவர்களுடன் அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sri Lankan Navy Arrests Eight TN fishermen

மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை மீனவளத்துறை உதவி இயக்குநர் பி. ரவீந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட்டும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

டிசம்பர் 9ம் தேதி இதேபோல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கைக் கடற்படையினர் விரட்டியித்திருந்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. இந்த நிலையில் 8 பேரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்புதான் கிறிஸ்துமஸையொட்டி இரு நாடுகளும் சில மீனவர்களை விடுவிப்பதாக அறிவித்து விடுவித்திருந்தன. இந்த நிலையில் எட்டு மீனவர்களை பிடித்துள்ளது இலங்கை.

English summary
Sri Lankan navy yesterday arrested eight Tamil Nadu fishermen on charges of poaching in the island nation's waters. They were arrested near Katchatheevu, an islet ceded to Sri Lanka by India in 1974, and were taken to Thalaimannar along with their boat, Assistant Director of Fisheries Department, P Ravindran and Rameswaram Fishermen Organisation President, S Emerit said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X