இலங்கை சிறையில் இருந்து விடுதலை - 77 மீனவர்கள் தாயகம் வருகை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று மாலை தமிழகம் வந்து சேர்கின்றனர்.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களைத் துன்புறுத்தி, படகுகளை நாசம் செய்து அவர்களை கைது செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கை கடற்படை அத்துமீறி, 92 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் வாடிவந்த 77 தமிழக மீஅன்வர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக சில நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழக மீனவர்கள் 77 பேரை இலங்கை தூதரக அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் இன்று மாலை தமிழகம் வந்து சேர்வார்கள் எனத் தெரிகிறது. இன்னும் இலங்கை சிறைகளில் 15 தமிழக மீனவர்கள் அடைபட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil fishermen arrested by Sirilankan Navy were released and they may reach Tamilnadu by today evening.
Please Wait while comments are loading...