திமுகவின் தன்மானத்துடன் உரசிப் பார்க்கவேண்டாம்.. ஸ்டாலின் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுகவின் தன்மானத்துடன் உரசிப் பார்க்கவேண்டாம்-ஸ்டாலின்- வீடியோ

  சென்னை: டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுக உதவியதாக அவதூறு பரப்புவோருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் தன்மானத்துடன் உரசிப் பார்க்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற திமுக மறைமுகமாக உதவியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  இந்நிலையில் இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.

  அவதூறுக்கு கண்டனம்

  அவதூறுக்கு கண்டனம்

  திமுகவைப் பற்றி அவதூறு பரப்புவோர் அவமானப்படுவது நிச்சயம் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுக உதவியதாக அவதூறு பரப்புவோருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  ஆர்கே நகர் பலியானது

  ஆர்கே நகர் பலியானது

  ஆர்கேநகர் இடைத் தேர்தலில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு பணநாயகம் கோலோச்சியது என்றும் அவர் கூறியுள்ளார். பணநாயகத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி பலியானதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

  தன்மானத்தை உரசிப்பார்க்க வேண்டாம்

  தன்மானத்தை உரசிப்பார்க்க வேண்டாம்

  மேலும் அதிமுக இருதரப்பு வேட்பாளர்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஜனநாயகத்தை விலைபேசினர் என்றும் அவர் கூறினார். திமுகவின் தனித்தன்மையுடனும் தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

  திமுக மூலம் ஆட்சி மாற்றம்

  திமுக மூலம் ஆட்சி மாற்றம்

  புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரா வழக்கை சந்திப்பவர்கள் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என நினைப்பது பகல் கனவு என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  விஷமப் பிரச்சாரத்துக்கு முடிவு

  விஷமப் பிரச்சாரத்துக்கு முடிவு

  திமுக யாரையோ மறைமுகமாக ஆதரிக்கிறது என்ற விஷமப் பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். களத்தில் தோற்றால் விருதாகவும், தோற்றால் விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவம் திமுகவுக்கு உள்ளது.

  கற்பனையின் உச்சக்கட்டம்

  கற்பனையின் உச்சக்கட்டம்

  ஊழல் கடலில் மூழ்கி கொண்டிருப்போர் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என கருதுவது பகல் கனவு. ஊழல்வாதிகளால் நல்லாட்சி வரும் என கருதுவது கற்பனையின் உச்சகட்டம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK working pressident Stalin condemns for defamaition on DMK had helped TTV Dinakaran's victory. Stalin has also warned that dont test DMK's selfrespect. DMK is the oly party who can change the govt he added. He said Money killed Democracy in RK Nagar by poll.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற