மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிலேயே கையை வெட்டிக் கொண்டார் எடப்பாடி.. போட்டுத்தாக்கும் ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையை வெட்டிக்கொண்டார் என ஸ்டாலினின் குற்றம்சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் குறித்து கேள்வி கேட்டுவிடுவோம் என்றே அச்சத்திலேயே அதிமுக அரசு, விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏக்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்க அப்பகுதி திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கரும் போனில் எம்எல்ஏக்களை அழைத்துள்ளார். ஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுகவினர் கொந்தளிப்பு

திமுகவினர் கொந்தளிப்பு

அன்று மாலையே எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

ஜனநாயகம் நோயாளியாக்கப்பட்டுள்ளது

ஜனநாயகம் நோயாளியாக்கப்பட்டுள்ளது

இதைத்தொடர்ந்து கண்டன உரையாற்றிய ஸ்டாலின் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனநாயகம் நோயாளியாக்கப்பட்டுள்ளது என்றார். எம்எல்ஏக்களை கைது செய்தது திமுக மீது அதிமுக அரசிற்கு இருக்கும் பயத்தை காட்டுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.

திமுக ஆட்சியில் அடிக்கல்

திமுக ஆட்சியில் அடிக்கல்

பல மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.400 கோடி ஒதுக்கியது திமுகதான் என்றும் ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் அரசியல் அநாகரிகம்

அதிமுகவின் அரசியல் அநாகரிகம்

அதிமுகவின் அரசியல் அநாகரிகத்தை எடுத்துச் சொல்லவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் ஸ்டாலின் கூறினார். விழாவில் திமுக எம்.எல்.ஏக்கள் உண்மையை அம்பலபடுத்தி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கையை வெட்டிக்கொண்டார் எடப்பாடி

கையை வெட்டிக்கொண்டார் எடப்பாடி

மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையை வெட்டிக்கொண்டார் என ஸ்டாலினின் குற்றம்சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் குறித்து கேள்வி கேட்டுவிடுவோம் என்றே அச்சத்திலேயே அதிமுக அரசு, விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏக்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

திமுக குரல் கொடுக்கும்

திமுக குரல் கொடுக்கும்


மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
எத்தனை முறை எம்எல்ஏக்களை கைது செய்தாலும் மக்கள் பிரச்னைக்கு திமுக குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஆற்றிய கண்டன உரையில் குறிப்பிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin condemns for DMK MLAs arrest on friday. He conducts protest in Pudukottai today against ADMK. Stalin said that edappadi cuts his hand in the hospital opening ceremoney.
Please Wait while comments are loading...