மழையால் நின்ற முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்.. செப்டம்பர் 5ல் மீண்டும் நடக்கிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக சட்டசபையில் இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேயில்லை என்றும் ஏற்கனவே கொண்டு வந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முரசொலி பவளவிழா மலர் வெளியீடு நடைபெற்று தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால் தலைவர்கள் உரையாற்ற இடைஞ்சல் ஏற்பட்டதையடுத்து பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

 Stalin says Tamilnadu CM is confused over trust vote and no confidence motion

இந்நிலையில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், செப்டம்பர் 5ல் முரசொலி பவளவிழா பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். சட்டசபையில் இதுவரையில் திமுக எந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வரவில்லை.

இதற்கு முன்னர் சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக சார்பில் இதுவரை அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவேயில்லை, இந்த அடிப்படை கூட தெரியாமல் முதல்வர் பேசுகிறார். அதிமுக அரசு மத்திய அரசின் அனைத்து உத்தரவிற்கும் அடிபணிந்து போவதற்கு பாஜகவின் அழுத்தமே காரணம், என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK announced that Murasoli platinum jubilee public meeting will be on September 5 and Stalin slams Tamilnadu CM over no confidence motion issue
Please Wait while comments are loading...