காவிரி: ஏப்.23ல் மனித சங்கிலி போராட்டம்.. திமுக தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் காவிரி வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக அறிவித்துள்ளது.

Stalin says that human chain protest will be done on April 23

அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் 6 நாட்கள் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை ஸ்டாலின் நடத்தினார். இந்நிலையில் அண்ணா அறிவாயலத்தில் இன்று ஸ்டாலின்  தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

இதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ஏப்ரல் 23-இல் மனித சங்கிலி பேராட்டம் நடத்துவது, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளது, பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தால் காவிரி வாரியம் குறித்து வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்களை ஸ்டாலின் அறிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President MK Stalin says that human chain protest will be conducted on April 23. This resolution passed in all parties meeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற