For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்.. பெங்களூர் பயணத்தை ரத்து செய்தார்

குமாரசாமியின் விழாவை புறக்கணித்துவிட்டு ஸ்டாலின் தூத்துக்குடி செல்ல திட்டமிட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு- வீடியோ

    சென்னை: குமாரசாமியின் விழாவை புறக்கணித்துவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு செல்கிறார்.

    குமாரசாமி முதல்வராக இன்று பதவியேற்கிறார். கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் கடைசி நேரத்தில் மாநில கட்சிகளுடன் கைகோர்த்து கொண்டு ஆட்சியை பிடித்தது பாஜக.

    இந்த முறையும் கர்நாடகத்தில் அதே பாணியை கையாள நினைத்த போது காங்கிரஸ் முந்திக் கொண்டது. தற்போது காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசு அமையவுள்ளது.

    Stalin skips Kumarasamys swearing in ceremony

    இன்று குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்துடன் பிரச்சினை இருக்கும்போது அங்கு செல்வது சரிபட்டு வராது என்று ஸ்டாலின் யோசித்தார்.

    மேலும் காவிரிக்காக அனைத்துக் கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், பந்த் ஆகியவற்றை முன்னெடுத்து விட்டு தற்போது நான் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டேன் என்று கூறியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குமாரசாமியின் விழாவுக்கு எப்படி செல்வது என்பதும் ஸ்டாலினுக்கு குழப்பமாக இருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு போராட்டம் நடத்திய 12 பேரை குருவி சுடுவது போல் சுட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெங்களூர் செல்வதை தவிர்த்துவிட்டு தூத்துக்குடிக்கு ஸ்டாலின் செல்கிறார்.

    English summary
    Another prominent leader who would skip the event is the DMK’s M K Stalin. Stalin, who was also expected to be present in order to show the burgeoning opposition consolidation against the BJP, has cancelled his Bengaluru visit and would instead head for Tuticorin in Tamil Nadu where nine people were killed in police firing on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X