For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை விமான நிலையத்தில் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு... பேசியது என்ன?

கோவை விமான நிலையத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொது செயலர் வைகோ சந்தித்து பேசினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோவை விமான நிலையத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொது செயலர் வைகோ சந்தித்து பேசினார். அரசியல் நாகரீகம் காரணமாக சந்திப்பதில் தவறில்லை என்று வைகோ கூறினார். ஆர்கே நகர் தேர்தல் குறித்து, நாங்கள் பேசவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகள் வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வித்யாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Stalin - Vaiko meets Coimbatore Airport

கடந்த 25ஆம் தேதி கோவை அரசு மருத்துவகல்லூரி அருகே விபத்தில் பலியான சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ரகுபதி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து சென்னை வருவதாக விமான நிலையம் வந்தார் ஸ்டாலின். அப்போது வைகோ அங்கிருந்தார். ஸ்டாலினை ச்நத்து பேசினார் வைகோ. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அரசியல் நாகரீகம் காரணமாக சந்திப்பதில் தவறில்லை என்றார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து, நாங்கள் பேசவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

English summary
DMK working president M.K Stalin and MDMK general secretary Vaiko met in Coimbatore Airport on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X