For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊதிய உயர்வு கோரி கதறும் சத்துணவு ஊழியர்கள்

Google Oneindia Tamil News

நெல்லை: சத்துணவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஓய்வூதியம் குறித்து அரசு மவுனம் காத்து வருவதால் ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஓன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பால்வாடி மற்றும் ஊட்டசத்து மையங்களில் 1 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

State Government maintains silence on obligation of Mid day meal scheme employees

இந்த துறையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல பேர் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.7 ஆயிரமும், சமையலர்,உதவியாளருக்கு ரூ.3 ஆயிரம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போதைய விலைவாசிக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. இதனால் இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிககை விடுத்து வருகி்ன்றனர். அதிமுக அரரசு பொறுப்பேற்ற உடன் இவர்களின் கோரிக்கை பரீசிலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சத்துணவு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்த சத்துணவு மையத்தின் மாவட்ட தலைவர் ஜார்ஜ் கூறுகையில்,

சத்துணவு மானிய கோரிக்கையில் மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3500 ஓதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஓய்வூதிய தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.எனவே சட்டசபை கூட்ட தொடரிலேயே இதை முதல்வர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
State Government continuously ignore the obligation of Mid day meal scheme employees, more than two lakh workers suffering out of this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X