For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுவாசலுக்கு ஆதரவாக சென்னையில் திடீரென திரண்ட மாணவர்கள்! போராட்டத்தை தடுக்க போலீஸ் குவிப்பு!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏ

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் திடீரென மாணவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மக்கள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாணவர்கள், திரைத்துறையினர், விவசாயிகள், தமிழ் அமைப்புகள் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Students gathered in Chennai for Neduvasal

இந்நிலையில் வாடிவாசலுக்காக சென்னையில் திரண்டதுபோல் நெடுவாசலுக்காக போராட சென்னையில் உள்ள மாணவர்களுக்கு சமூகவலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி முன்பு ஏராளாமனோர் திரண்டனர். தகவலறிந்த போலீஸார், போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்க சென்னையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
The student in Chennai has gathered in Anna Salai to support Neduvasal people, but Police has sent them back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X