அக்னியின் ருத்ரதாண்டவம்... திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் - வெயிலுக்கு ஒருவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல நகரங்களில் அனல் காற்று வீசுகிறது. திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வெயிலுக்கு சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார்.

அக்னி நட்சத்திர காலத்தின் இறுதிகட்டம் என்பதால் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. வெப்பத்தின் வேகத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். நெருப்புத்துண்டுகளை வீசுவது போல அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

வெயில் ருத்ரதாண்டவம்

சென்னையில் 3வது நாளாக இன்றும் காலை முதலே அனல் காற்று வீசி வருகிறது. காலையிலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது.

சதமடித்த வெயில்

சதமடித்த வெயில்

இன்றும் பல நகரங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவானது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சேலம், நெல்லை, கடலூர், ஈரோடு, கரூர், தஞ்சாவூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா பயணி மரணம்

சுற்றுலா பயணி மரணம்

நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த ஆவரைகுளத்தைச் சேந்த காமராஜ் என்பவர் பாபாநாசத்தில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மயங்கி விழுந்து உயிழந்துள்ளார்.

வானிலை எச்சரிக்கை

வானிலை எச்சரிக்கை

வடதமிழகத்தில் நாளை வரை அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து வீசும் அனல் காற்றினாலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளது. உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு கோடை மழை 4 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Met office Warning weather report, heat wave will continue in north Tamilnadu. Chennai recorded 41 degree celsius.
Please Wait while comments are loading...