கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல.. மனுவை தள்ளுபடி செய்யாத சுப்ரீம் கோர்ட்டு குறித்து பாலு
புதிய சட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யாமல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற அளவில் உச்ச நீதிமன்றம் நடந்து கொண்டுள்ளது என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பாலு மேலும் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தடை வழங்க மறுத்திருப்பது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. முன்பே இதனை செய்திருந்தால் இப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் உருவாகி இருக்காது. தமிழக அரசும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்காது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேட்ட போது, அதற்கென்ன அவசரம் என்றும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியது. ஆனால், இன்று மாநில அரசின் சட்டத்திற்கு தடை வழங்க தயக்கம் காட்டியதோடு, தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதுதான் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
ஒட்டு மொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம், நாகரிகம் தொடர்புடைய விஷயம் இது என்பதை மத்திய அரசுக்கு புரிந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்த மனுக்களை எல்லாம் முழுமையாக தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றம் தற்போது நடந்து கொண்டுள்ளது.
நிச்சயமாக, தமிழகத்தில் நடக்கக் கூடிய ஜல்லிக்கட்டை உச்ச நீதிமன்றத்தாலும், மத்திய அரசாலும் பீட்டா போன்ற அமைப்புகளாலும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை நடைபெற்ற போராட்டம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதே போன்று காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளிலும் நல்ல தீர்ப்புகளை நாம் எதிர்காலத்தில் அடைவோம் என்று நம்புகிறேன் என்று வழக்கறிஞர் பாலு கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications