For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அரசு வேலையில் வெளியாரை வெளியேற்றக் கோரி ரயில் மறியல் போராட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்றக் கோரி தமிழ்த் தேசியப் பேரியக்கம் வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் முதல் கூட்டம் சென்னை க.க. நகரிலுள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கூட்டத்திற்கு இயக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அமைப்பின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tamil Desiya Periyakkam to stage rail roko on dec. 12

கூட்டத்தில், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்த அரசியல் அறிக்கையை பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்வைத்தார். அமைப்புப் பணிகள் குறித்த வேலை அறிக்கையை தலைவர் பெ.மணியரசன் முன்வைத்துப் பேசினார். விவாதங்களுக்குப் பின் அவை நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், "தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காட்டுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், பெருந்திரளான தமிழின உணர்வாளர்களையும், பொது மக்களையும் பங்கேற்கச் செய்வதற்கானப் பணிகளில் உடனடியாக ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

English summary
Tamil Desiya Periyakkam has decided to stage rail roko on december 12 demanding the dismissal of other state people in government offices in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X