32 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஜெ., கடிதம்
சென்னை: செம்மரம் வெட்டச் சென்றாக கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்ட சென்றதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 32 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என 3 இடங்களில் தனித்தனியாக விசாரனை நடத்தப்பட்டது. இதனிடையே செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்களும் திருப்பதி 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 32 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆந்திர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழகத்தின் சார்பில் 2 வழக்கறிஞர்களை ஆந்திரா அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரச்சனையில் ஆந்திர முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications