தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கர்நாடக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குந்தா பாளத்தில் 7 சென்டி மீட்டர், பேச்சிப்பாறையில் 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications