திருத்தணி திகுதிகு 111 டிகிரி பாரன்ஹீட் ... சென்னை, மதுரை திருச்சியில் அனல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலேயே அதிக பட்சமாக திருத்தணியில் இன்று 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, கரூர், திருச்சி, மதுரையில் இன்று வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்ப காற்று அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலை அதிகரித்து வந்தது. சென்னையில் கடல்காற்று குளுமையாக வீசி வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதற்குக் காரணம் வங்கக் கடலில் உருவான மாருதா புயல்தான் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மாருதா புயல்

மாருதா புயல்

தமிழக கடற்கரை பகுதியில் உள்ள ஈரப்பதத்தை மாருதா புயல் உறிஞ்சி சென்றுவிட்டதன் காரணமாக, தமிழகத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்துவிட்டது. இதனால் நேற்றும் இன்றும் தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரித்தது.

அனல் வெப்பம்

அனல் வெப்பம்

இன்று பல நகரங்களில் வெயில் சதமடித்தது. வெப்பக்காற்று வீசியதால் பலர் வீடுகளுக்குள் முடங்கினர். திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம், மதுரை, திருச்சி கரூரில் 107 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

வெப்பக்காற்று அதிகரிக்கும்

வெப்பக்காற்று அதிகரிக்கும்

தஞ்சாவூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திண்டுக்கல்லில் 104 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 102 வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்ப காற்று அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மேலும் சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று காலை முதலே அனல் காற்று வீசிய நிலையில் இரு தினங்களுக்கு வெப்பக்காற்று அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai, Madurai,Trichy touch 107 degree FH mark temparature.People residing in the interior parts are used to heatwave.
Please Wait while comments are loading...