மோடி எழுதிய புத்தகத்தை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்.. செங்கோட்டையனிடம் தமிழிசை நேரில் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை, பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும் இதனை ஒவ்வொரு மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்
பிரதமர் மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாக இந்த புத்தகத்தில் பல கருத்துகளை மோடி கூறியுள்ளதாகவும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு என்று பல பிரத்யேக பயிலும் வழிமுறைகள் இதில் உள்ளதாகவும் பாஜக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவருக்கு பிரதமர் மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகத்தை தமிழிசை வழங்கினார். மேலும் இந்த புத்தகம் அனைத்து தமிழக மாணவ மாணவிகள் கையிலும் சேரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
மேலும் பேசிய அவர், நீட் தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாக தயாராகி வருவதாகவும், விரைவில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!