சேலத்தில் அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும்... முதல்வர் உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம் : சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சேலத்தில் அதிநவீன பிரம்மாண்ட பஸ்போர்ட் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார்.

சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.21.97 கோடி செலவில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதே போன்று சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட உள்ள ரூ.103.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Tamilnadu CM Palanisamy says that soon Salem will get bus port with high facilities

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி சேலத்தில் அதிநவீன பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார். சேலம், மதுரை, கோவையில் ஏர்போர்ட்டை போல பஸ் போர்ட் அமைக்கப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu CM Palanisamy says that soon Salem will get bus port with high facilities and central government approved this, after Salem - Madurai, coimbatore will also get these bus ports CM assured,

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற