For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தைவிட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எவ்வளவோ பெட்டர்.. புள்ளி விவரத்தோடு தாக்கும் ப.சிதம்பரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஊழல் குற்றச்சாட்டுகள்.. காங்கிரசுக்கு ஏற்பட்ட கதிதான் மோடி அரசுக்கு ஏற்பட போகிறது- வீடியோ

    சென்னை: குஜராத்தைவிட தமிழகமும், கேரளாவும் சமூக பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற கருத்தை அவர் ஏற்கனவே ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்த நிலையில், இப்போது டிவிட்டரில் புள்ளி விவரங்களோடு மீண்டும் அதை தெளிவுபடுத்தியுள்ளார் சிதம்பரம்.

    ப.சிதம்பரம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களின் தொகுப்பை பாருங்கள்:

    மோடி வாக்குறுதி

    2014 லோக்சபா தேர்தல் நேரத்தில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அச்சேதின் வருகிறது என்று சிறப்பாக ஒரு ஸ்லோகனை முன் வைத்தார். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். கருப்பு பணத்தை மீட்டு எடுத்து ஒவ்வொருவர் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார்.

    குஜராத் மாடல் என்றால் என்ன?

    எதிர்பார்த்தபடியே, மோடியின் மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை. 42 மாத கால ஆட்சியில் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. அதேபோன்ற ஏமாற்றம் குஜராத்தில் உள்ளது. குஜராத் மாடல் என பிரபலப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

    குஜராத் முன்பே முன்னேறியது

    1995க்கு முன்பே குஜராத்தின் வளர்ச்சி விகிதம், தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகத்தான் இருந்தது. அமுல், துறைமுகங்கள், சிறப்பான ஆடை தொழில்கள், கெமிக்கல் தொழில்கள் போன்றவையெல்லாம் 1995க்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதன் பெருமை குஜராத் மக்களையே சேரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ள சிதம்பரம் ஒரு பட்டியலையும் அதில் இணைத்துள்ளார்.

    தமிழகம் சிறப்பு

    குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களின் கல்வி, சராசரி ஆயுள், பாலின விகிதம், குழந்தை இறப்பு விகிதம், சமூக செயல்பாடுகளுக்கான செலவீனம் போன்றவற்றை ஒப்பிட்டு குஜராத்தான் இம்மாநிலங்களைவிட கீழே உள்ளது என்பதை விளக்கியுள்ளார் சிதம்பரம்.

    English summary
    "The table tells the story of Gujarat and how, despite the boasts, Gujarat is not ahead of four comparable states. While Gujarat has progressed industrially, in many critical areas of human development, Gujarat may have actually regressed in the last 22 years" says P.Chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X