பெரியபாண்டியனை கொன்றவர்களை 15 நாளில் பிடிக்க வேண்டும்... வீரலட்சுமி எச்சரிக்கை!
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டுக் கொன்றவர்களை 15 நாட்களில் பிடிக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை கொன்றவர்களை 15 நாட்களில் ராஜஸ்தான் போலீசார் பிடிக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது கொள்ளை கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலைக்கு காரணமானவர்களை 15 நாட்களில் பிடிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் பேசியுள்ள வீரலட்சுமி கூறியுள்ளதாவது : தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடலுக்கு சென்றால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர், ஆந்திராவில் கூலி வேலைக்கு சென்றால் அங்கும் தாக்கப்படுகிறார்கள். தற்போது குற்றவாளியை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கும் மேல் பொறுமை காக்க முடியாது தமிழகத்திற்கு பிழைக்க வந்த ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து சென்றதை பிடிக்கச் சென்ற போது பெரியபாண்டியன் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றவர்களை 15 நாளில் ராஜஸ்தான் போலீசார் பிடிக்க வேண்டும் அப்படி குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தமிழகத்தில் வாழும் ராஜஸ்தான் மாநிலத்தவருக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று வீரலட்சுமி பேசியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications