நீங்க 50 வருஷம் ஆண்டிங்க.. அடுத்த 50 ஆண்டு நாங்க ஆள வேண்டாமா.. தமிழிசையின் ஆசையை பாருங்களேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் 127வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழிசை.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் பாஜக காலுன்றும் என்று சாவல் விட்டார். மேலும் 50 ஆண்டுகள் தமிழகத்தில் "நீங்கள் ஆண்ட போது நாங்களும் ஆள வேண்டாமா" என்று மு.க. ஸ்டானுக்கு பதில் கூறினார்.

Tamizhisai attacks MK Stalin

உத்தரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 84 பேர் போட்டியிட்டு 64 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போன்று தமிழகத்தில் நாங்களும் வெற்றி பெறுவோம் என்று கூறிய தமிழிசை பீம் என்ற மொபைல் 'ஆப்'பை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியதையும் சுட்டிக் காட்டினார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று கத்திப்பாரா மேம்பாலத்தை பூட்டுப் போட்டு மறியல் செய்த வ. கவுதமன் உள்ளிட்டோரை கடுமையாக சாடினார். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தனர் என்று தமிழிசை கேள்வி எழுப்பினார். மேலும், இயக்குநர் கவுதமனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும், விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை என்றும் அவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP leader Tamizhisai pays tribute to Ambedkar for his 127th birthday.
Please Wait while comments are loading...