தென்காசியில் "அதை" பக்கத்தில் வைத்து கொண்டே காரிலேயே ரவுண்டு அடித்த கணவர்.. தண்ணீரில் மிதந்த மனைவி
தென்காசி: தென்காசியை கலங்கடித்த பெண் யார் என்பது குறித்து போலீசார் துப்பு துலக்கியதில், தற்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்று சிறையில் அடைத்துள்ளனர். யாரிந்த பெண்? என்ன நடந்தது தென்காசியில்?
தென்காசியில் இலத்தூர் பகுதியில் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில், பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார், அந்த குளத்திலிருந்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

அந்த பெண்ணின் உடல் முழுமையாக எரிந்த நிலையில் காணப்பட்டது. ஆனால், அவரின் கைகள் மட்டும் எரியாமல் இருந்தது. சடலத்துக்கு அருகிலேயே சில மது பாட்டில்கள் சிதறி கிடந்தன..
கொலை செய்தது எப்படி
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலத்தை, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, அந்த பகுதியில் காணாமல் போன இளம்பெண்களின் லிஸ்ட்டை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தும், நேரிலேயே சென்று விசாரணையை துவங்கினார்.
இந்நிலையில், பெண்ணின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.. காட்டுப் பகுதியில் பெண்ணை எரித்து கொன்றது, அவரது கணவர் ஜான் கில்பர்ட் என்பதும் அம்பலமாகியிருக்கிறது..
சொல்ல சொல்ல கேட்காத கமலி
சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட்டின் மனைவி பெயர் கமலி.. இவர் இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கள்ளக்காதலை கைவிட சொல்லி பலமுறை கண்டித்தும்கூட, கமலி தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லையாம். அதனால், மனைவியை, கணவனே கொலை செய்துள்ளார். கோபத்தில் இரும்பு கம்பியால் தாக்கியே கமலியை கொன்றுள்ளார்..
அதுமட்டுமல்ல, ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டு, அந்த சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. இதற்காக, சடலத்துடன் 2 நாட்கள் காரிலேயே ரவுண்டு சுற்றி சுற்றி வந்துள்ளார். அதற்கு பிறகுதான், தென்காசி பாழடைந்த குளத்தில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்.
தம்பியும் சிக்கினார்
சடலத்துடன் காரிலேயே ஜான் கில்பர்ட் வலம்வந்ததுதான் போலீசாருக்கு மிகப்பெரிய க்ளூவாக இருந்திருக்கிறது. அந்த பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான கார் நம்பரை வைத்துதான், ஜான் கில்பர்ட்டை போலீசார் பிடித்துள்ளனர்..
பிறகு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த கொலைக்கு ஜான் கில்பர்ட்டின் தம்பி உதவினாராம்.. இதையடுத்து, அண்ணன், தம்பி இருவரையுமே போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications