நம்பி வந்துடாதீங்க.. ரஜினிக்கு தம்பிதுரை வார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அரசியலுக்கு வந்தால் ஏமாந்துவிடுவீர்கள் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற 20 ஆண்டுகால சஸ்பென்ஸ்களை இன்று உடைத்தெறிந்தார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.

Thambidurai says that Rajini will deceive if he come to politics

இதற்கு திரைப்படத் துறையினர், அரசியல் கட்சியினர் என தங்கள் தரப்பு கருத்துகளை வரவேற்பாகவும் எதிர்ப்பாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில்
திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தம்பிதுரை எம்பி கூறுகையில், எம்ஜிஆர் போல் அரசியலில் வரவேண்டும் என்றால் ஏமாந்து விடுவீர். தமிழன் தமிழ்நாட்டை காக்க வேண்டும்.

எம்ஜிஆர் பயணம் வேறு , மற்றவர்கள் பயணம் வேறு. எனவே எம்ஜிஆரை மனதில் கொண்டு அரசியலுக்கு வந்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Loksabha Deputy Speaker Thambidurai says that Rajini will deceive if he come to politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற