பாஜகவுக்கு எதிராக ஜனநாயகப் போரை ராகுல் அறிவிக்க வேண்டும்.. சொல்கிறார் தமிமுன் அன்சாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி ஜனநாயக போரை அறிவிக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்தது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட மோதலுக்கு பாஜகதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Thamimun Ansari urges Ragul ganndhi to announce democracy war on BJP

இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி அதிமுக பிளவுபட பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகப் போரை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, சசிகலா அணிக்கு ஆதரவு அளிக்க தமிமுன் அன்சாரிக்கு 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK support MLA Thamimun Ansari urges Ragul ganndhi to announce democracy war on BJP. He also said BJP is the reason for the split of ADMK.
Please Wait while comments are loading...