மாஞ்சோலை போராட்டத்தின் 15-ம் ஆண்டு நினைவு நாள்: கிருஷ்ணசாமி, திருமாவளவன் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியில் நடந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது, போலீசாரின் தாக்குதலால், 17 தலித் இன மக்கள் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர்விட்டதன் 15-வது ஆண்டுநினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி கூலி உயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றபோது கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர்.

The 15th anniversary of the Manjolai struggle in Tirunelveli district

இதில் தப்பியோடியபோது 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தின் 15-ஆண்டு நினைவு தினம் நெல்லையில் இன்று நடந்தது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puthiyatamilagam Dr.Krishnasamy and VCK chief Thol.Thirumavalavan tribute to the 15th anniversary of the Manjolai struggle
Please Wait while comments are loading...