தேனி காட்டுத் தீயில் சிக்கிய சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தேனி குரங்கணி காட்டுத் தீவிபத்து 8 பேர் பலி.. சிக்கியவர்களின் விபரம்- வீடியோ

  தேனி: தேனி அருகே குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

  தேனி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

  The list of Chennai girls who trapped in Theni forest fire

  இந்தப் பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் வந்துள்ளனர். இதில் ஒரு மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

  இந்த தீவிபத்தில் சிக்கியவர்கள் சென்னை மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஐடி ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

  இவர்கள் நேற்று காலை மலையேற சென்றுள்ளனர். இன்று மாலை அவர்கள் வெளியே வந்திருக்க வேண்டும். ஆனால் காட்டுத் தீயினால் அவர்களால் வெளியேற முடியாத சூழல் நிலவியது.

  சென்னையை சேர்ந்த 25 மாணவிகளின் பெயர் பின்வருமாறு:

  திவ்யா, மோனிஷா தனபால், ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலட்சுமி, இலக்கியா சந்திரன், சுகானஆ, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்ருதி, நிவேதா, ஷ்ரதா ஸ்ரீராமன், அனுவித்யா, ஹேமலதா, புனிதா, சாய்வசுமதி, சுபா, தேவி, பூஜா, மினா ஜார்ஜ், நிஷா, திவ்யா ஆகிய 25 மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கி தப்பியுள்ளனர்.

  அருண், விபின் ஆகிய இரு இளைஞர்களும் மாணவிகளுக்கு துணையாக சென்றுள்ளனர். ஆகமொத்தம் 27 பேரும் சென்னை ஆவர்.

  காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் திருப்பூரை சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, ஈரோட்டை நேகா, சென்னையை சேர்ந்த மோனிஷா, சகானா, பூஜா ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The list of Chennai girls who trapped in Theni forest fire.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற