சென்னை ஹைகோர்ட் கட்டிட 125வது ஆண்டு விழா.. ரிப்பன் வெட்டி துவக்கினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்ற பெயரில் கோர்ட் செயல்பட்டது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 1862ல் தொடங்கப்பட்டது.

The Madras High Court celebrated its 125th anniversary

பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன், உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பு, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டதாம்.

1892ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய கவர்னர் பெய்பி பாரன் உயர் நீதிமன்ற சாவியை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் கெலின்ஸ் வசம் ஒப்படைத்தார் என்கிறது வரலாறு.

அதனடிப்டையில் உயர் நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 125 ஆண்டுகள் ஆகிறது என்பதால், இதை விழாவாக நடத்துகிறது அரசு. இதற்கான விழா இன்று காலை நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madras High Court celebrated its 125th anniversary. CJI and Chief Minister of Tamilnadu Edappadi Palanisamy participated.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற