மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பாதுகாப்பு படை திடீர் ஆய்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தீவிபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு சில நாட்களுக்கு முன்பு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது.

The National Intelligence Agency and security forces inspecting in the The Madurai Meenakshi Amman Temple

கோவிலின் வசுந்தராயர் மண்டபத்தின் தூண்கள் சேதமடைந்தது. மண்டபத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கோவில் மண்டபத்தில் இருந்த புறாக்கள் தீயில் கருகின. இதைத்தொடர்ந்து கோவிலில் அமைச்சர்கள் துணை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்புக் குறித்து தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தேசியப் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The National Intelligence Agency and security forces are conducting inspection in the The Madurai Meenakshi Amman Temple after the fire accident.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற