ராகுல்காந்தியை கேள்வி கேட்பது வரம்பு மீறிய செயல்.. விஜயதாரணியை விளாசிய திருநாவுக்கரசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல்காந்தியை கேள்வி கேட்பது வரம்பு மீறிய செயல் என விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளாசியுள்ளார்.

தமிழக சட்டசபையில் கடந்த திங்கள் கிழமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

Thirunavukarasar condemns MLA Vijayadharani for questioning Rahul gandhi.

ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏவும் அக்கட்சியின் கொறடாவுமான விஜயதாரணி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்த சபாநாயகருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்காதது காழ்ப்புணர்ச்சியால் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக சபாநாயகருக்கு வாழ்த்து கூறிய விஜயதாரணிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுலை விஜயதாரணி கேள்வி கேட்பது வரம்புமீறிய செயல் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu congres leader Thirunavukarasar has condems MLA Vijayadharani for questioning Rahul gandhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற