தூத்துக்குடிக்கு தலைவர்கள் செல்ல விடாமல் இழுத்தடிப்பு- விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைப்பு!
சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி செல்லும் விமானம் 1 மணி நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
Recommended Video

தூத்துக்குடி: சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய விமானம் தற்போது 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது. அந்த விமானத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் காத்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடக்கவிருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி செல்லும் ரயில்களும் நாசவேலை ஏதேனும் நடந்துவிடுமோ என்று எண்ணி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்தும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்துடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான சேவையிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தூத்துக்குடி கொடூர சம்பவம் தொடர்பாக ஏராளமான கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். அத்துடன். இன்று தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை 9.15 மணிக்கு தூத்துக்குடி புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். தூத்துக்குடி புறப்படும் விமானத்திலும் அவர்கள் அமர்ந்துவிட்டனர்.
ஆனால் விமானம் 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதனால் தலைவர்கள் விமானத்தினுள்ளேயே காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி விமானத்தை நிறுத்தி வைத்து, தலைவர்களை தூத்துக்குடிக்கு செல்லாமல் இழுத்தடிப்பு செய்து வருவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications