For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் ஆளுநரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு ... திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி-வீடியோ

    சென்னை: ஆளுநர் ஆய்வு குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்தது.

    தமிழக சட்டசபையில் மார்ச் மாதம் நடப்பு நிதி.யாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக கடந்த மே மாதம் 29-ஆம் தேதி கூடியது.

    இதையடுத்து கடந்த 14-ஆம் தேதி முதல் சட்டசபையில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதி பக்கம் சென்று பணிகளை கவனித்து வந்தனர்.

    மானியக் கோரிக்கை

    மானியக் கோரிக்கை

    இந்நிலையில் 10 நாட்கள் கழித்து இன்று தமிழக சட்டசபை கூடியது. இன்றைய தினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுது பொருள் மற்றும் அச்சு, சுற்றுலை- கலை மற்றும் பண்பாடு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

    திமுக எம்எல்ஏக்கள்

    திமுக எம்எல்ஏக்கள்

    இந்நிலையில் ஆளுநர் ஆய்வு குறித்து ஸ்டாலின் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுநர் குறித்து பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்ததார். இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    சபாநாயகர் தலையீடு

    சபாநாயகர் தலையீடு

    அப்போது பேசிய ஸ்டாலின் மாநில சுயாட்சி பற்றி கருணாநிதி ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் சபாநாயகர் குறுக்கீடு செய்தார். மேலும் ஆளுநரை பற்றி சட்டசபையில் விவாதிக்கக் கூடாது என்றார் சபாநாயகர்.

    சட்டசபை கூட்டம்

    சட்டசபை கூட்டம்

    தொடர்ந்து ஸ்டாலினை பேச விடாமல் சபாநாயகர் தடுத்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து திமுக வெளிநடப்பு செய்தது. இந்த சட்டசபை இன்னும் 2 வார காலம் சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    ஜூலை 9-இல் நிறைவு

    ஜூலை 9-இல் நிறைவு

    நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறும். வரும் ஜூலை 9-ஆம் தேதியுடன் சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைகிறது.

    English summary
    Tamilnadu Assembly convenes today after 10 days holiday.After question hour finishes, grant request on News Information and Tourism department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X