For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளுக்குள் ஏற்பட்ட மோதல்.. தள்ளிப்போகும் அறிவிப்பு.. தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய தாமதமாவது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிப்பதில் பாஜகவின் தேசிய தலைமை சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. தமிழக பாஜகவிற்கு சரியான தலைவரை நியமிக்க முடியாமல், பாஜக தலைமை குழம்பி வருகிறது.

6 மாதங்களுக்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார். அதன்பின் புதிய தலைவர் தமிழக பாஜகவிற்கு நியமனம் செய்யப்படவில்லை.

இதனால் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்! அருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்!

இரண்டு நாள்

இரண்டு நாள்

விரைவில் தலைவர் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதற்காக இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேசிய தலைவராக போகும் ஜே.பி நட்டாவும் கான்பிரன்ஸ் கால் மூலம் இந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார். முதல்நாள் மீட்டிங், 4 மணி நேரம் தாண்டி நடந்தது.

வடஇந்திய தலைவர்கள்

வடஇந்திய தலைவர்கள்

இந்த ஆலோசனையில் வடஇந்திய தலைவர்கள் சிலரை தேசிய தலைவர் ஜெ. பி தமிழக தலைமையாக பரிந்துரை செய்துள்ளார். உத்தர பிரதேச, பீகார் ஸ்டைல் அரசியலை இங்கே கொண்டு வர அவர் ஆலோசனை செய்துள்ளார். ஆனால் இதற்கு சில தமிழக பாஜக தலைகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உட்கட்சி அரசியல்

உட்கட்சி அரசியல்

இன்னொரு பக்கம் எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் என நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் தமிழக பாஜகவிற்காக உழைத்த நபர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும். வெளி ஆட்கள் வர கூடாது என்று சிலர் கூறியுள்ளனர்.

முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு

முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு

ஆனால் தமிழக பாஜகவிற்கு உள்ளேயே கூட, நிறைய உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சி தொண்டர்கள் எல்லோரும் அணி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் ஒருவரை தலைவராக தேர்வு செய்தால் இன்னொரு கோஷ்டி கோபம் அடையும். இது தலைவரை தேர்வு செய்வதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2021 தேர்தல்

2021 தேர்தல்

2021 தேர்தலுக்கு பாஜக தயாராக வருகிறது. இதில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும். வலிமையாக இருக்கும் திமுகவை இந்த கூட்டணி எதிர்கொள்கிறது. இதனால் அதிமுகவுடன் இணக்கமாக செல்லும் தலைவரை தேர்வு செய்ய பாஜக தேசிய தலைமை விரும்புகிறது. ஆனால் தமிழிசை அளவிற்கு தமிழக பாஜகவில் இப்போது அப்படி இணக்கமாக செல்ல கூடிய தலைவர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தயாராக இல்லை

தயாராக இல்லை

அதேபோல் தமிழக பாஜக தலைவர் பதவி என்பது இந்தியாவில் மிகவும் கஷ்டமான பதவி. நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும், மீம்களை எதிர்கொள்ள வேண்டும், முக்கியமாக கட்சியின் தலைவர்கள் பேசும் சர்ச்சையான கருத்துக்களை சமாளிக்க வேண்டும். இதனால் சில முக்கிய உறுப்பினர்கள் தலைவர் பதவி கொடுத்தாலும் வேண்டாம் என்றும் சொல்லும் முடிவில்தான் இருக்கிறார்கள்.

குழப்பத்தில்

குழப்பத்தில்

இதுவும் கூட தலைவரை தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்பட காரணம் ஆகும். இதனால் யாரைத்தான் தலைவராக தேர்வு செய்வது என தெரியாமல் தேசிய பாஜக தலைமை குழம்பி வருகிறது. கடந்த மாட்டுப்பொங்கல் அன்றே தமிழக பாஜக தலைவரை நியமிக்க வேண்டியது. ஆனால் இந்த சிக்கல்கள் காரணமாக இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

Take a Poll

English summary
Tamilnadu BJP chief announcement maybe get postponed again due to internal drift.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X