இனி பாஜக இப்படிதான் பேசுமா என்ன?... தமிழக பாஜகவை வெளுத்து வாங்கிய டுவிட்டர்வாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக பாஜகவை வெளுத்து வாங்கிய டுவிட்டர் வாசிகள்- வீடியோ

  சென்னை: கர்நாடகாவை விட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கிளம்பிவிட்டாரா என்று கேட்டு அவரை வம்பிழுத்த தமிழக பாஜகவினரை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.

  ஆரம்பத்திலிருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ,பாஜக தலைவர்களையும் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரமும் செய்தார்.

  இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது குறித்து தமிழக பாஜக பிரமுகர் நாராயணன் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கர்நாடகாவை விட்டு கிளம்பி விட்டாரா பிரகாஷ்ராஜ்? பாவம். அவரை விட்டு விடுங்கள் என்று வம்பிழுத்துள்ளார். ஏதோ வன்முறையை தூண்டுவது போல் டுவீட்டியிருந்தார்.

  நீங்கள் கிளம்பிட்டீங்களா

  DrTamilisaiBJP ஏன் நீங்களெல்லாம் தமிழ்நாட்டை விட்டு கிளம்பிட்டீங்களா?

  பிரகாஷ் ராஜுக்கு மிரட்டல்

  பாவம் அவரை விட்டுவிடுங்கள்னு நீங்க சொல்றது பரிதாபம் மாதிரி தெரியல மிரட்டல் விடுவது போல் உள்ளது. பாவம் கர்நாடகத்தை இனி யாரும் காப்பாத்த முடியாது

  நோட்டாவை முந்த முடியவில்லை

  தமிழ்நாட்ல நீங்க ஜெயிக்கவே முடியாது (நோட்டாவுக்கு கீழே) என தெரிந்தும் வெளிமாநில வெற்றிகளை கொண்டாடிக்கொண்டு வெட்கமே இல்லாமல் இப்படி பேசிக்கொண்டு தமிழகத்தில் இருக்கும்போது பிரகாஷ்ராஜ் ஏன் கிளம்பவேண்டும்? பாவம் என்றுதான் உங்களையெல்லாம் தமிழகத்தில் விட்டுவைத்திருக்கிறோம்.

  ஆணவப்படக் கூடாது

  உங்களை விட அதிகமாக ஆடியவர்கள் காங்கிரஸ் இன்றைய நிலை நாளை உங்களுக்கும் வரலாம்
  ஆனந்தம் படலாம்
  ஆணவப் படக் கூடாது

  மிக விரைவில்

  இந்தியாவை விட்டே நீங்கள் கிளம்ப ஒரு காலம் மிக விரைவிலேயே வரும் போலிருக்கு ..

  நிலைக்கவும் நிலைக்காது

  வெற்றி என்பது கடுமையா உழைத்து பெறுவது குறுக்கு வழியில் வருவதல்ல அது நிலைக்கவும் நிலைக்காது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP leader Narayanan Thirupathy criticised about Prakash Raj for congress gets defeat. Netisans gives suitable reply to BJP leader.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற