For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி நிலவரம்.. அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் ஓபிஎஸ்...வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது, போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்தனர். பலர் இப்போது வரை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    TN CM Palanisamy Discusses with Ministers in Secretariat

    இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சிகிச்சை பெறும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் வந்திருந்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெற்று வருகிறது.

    விரைவில் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதன் பின்னர் தாக்குதல் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் பார்வையிட்ட துணை முதலமைச்சர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் தற்போது தீவிர ஆலோசனையில் தற்போது தற்போது வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று உள்ளதால், இன்று காலை தூத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதன் விவரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy discusses with Tamil Nadu Ministers in the Chennai Secretariat regarding the incident in Thoothukudi. Deputy Chief Minister O.Panneerselvam said. Officials, including DGP Rajendran, also said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X