முதல்வரின் தனிச்செயலர் சிவ்தாஸ் மீனா மாற்றம்! ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் பழனிசாமியின் 2வது தனிச் செயலாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்பாக பொதுத்துறை பொறுப்பையும் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கவனித்து வந்தார். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன்,யதேந்திரநாத் உள்ளிட்டோர் கடந்த 1ம் தேதி மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

 Tn CM's personal secretary transfered to central government job

இந்நிலையில் சிவ்தாஸ் மீனாவும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு கடந்த வியாழகக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பிற்கு சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டுள்ளார். ஓராண்டு மட்டுமே பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், இவரைப் பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வரின் தனிச் செயலராக இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi palanisamy personal secretary Shivdoss meena transferred to central government's urban development department
Please Wait while comments are loading...