நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை... ஓ.பன்னீர்செல்வம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியகுளம் : நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் காட்டுவிலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கு விவசாயிகளும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இத்தகைய கருத்தை கூறியுள்ளார்.

தேனிமாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்துத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறைஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெரியகுளத்தில் இருந்து அகமலை செல்லும் சாலையில் கண்ணக்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் : நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.

TN deputy CM says nutrino project didnot affect anyone

பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஓ.பன்னீர்செல்வம் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதா, வேண்டாமா என்று அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் மலையை குடைந்து அணுசோதனை நடத்தும் திட்டம் இப்பகுதிக்கு ஏற்றதாக அமையாது. அவ்வாறு செய்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நீர்வளமும் பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் வகப்பாதுகாபபு சட்டத்தின் கீழ் பாதுகாப்பட்ட இடத்தில் இருந்து 4.9கி.மீ தூரத்தில் தான் உள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Deputy CM O.Paneerselvam says because of Nutrino project people and forest animals wont affect as farmers and environmentalist opposing it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற