எச்.ராஜாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : திருமாவளவன் காட்டம்

Subscribe to Oneindia Tamil
  எச்.ராஜாவை திட்டும் திருமாவளவன்

  காஞ்சிபுரம் : தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்ந்து பேசி வரும் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

  பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து திமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் கோயில்களில் தீ விபத்து ஏற்படும் போது அதனைத் தடுக்க கோயில்களின் வெளியே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பான அறிவிப்பு. அனைத்து கோயில்களின் வெளியேயும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

  TN Government should file case oh H Raja

  அரசியலில் இருப்பவர்களுக்கு நாகரீகம் இருக்க வேண்டும். தரம் தாழ்ந்து பேசுதல் கூடாது. ஆனால், பாரதிய ஜனதாவின் எச்.ராஜா பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தரம் தாழ்ந்து பேசுபவர்கள் எந்தக் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

  தமிழகத்தில் இருந்து ஊழலை ஒழித்து விடலாம். ஆனால் மதவாதம் பரவினால் அதனை அகற்றுவது கடினம். எங்களின் ஒட்டுமொத்த கொள்கையே மதவாதத்தை ஒழிப்பதே தான் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Thirumavalavan wants Government should file case oh H Raja. He also added that TN Government should take necessary actions to get back bus fare hike.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற