ஆளுநர் வித்யாசாகர் ராவ் காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு திடீர் அகற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மே முதல் தேதியில் இருந்து விஐபி கலாச்சாரம் ஒழிய சிவப்பு விளக்கு அகற்றம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள விஐபி தலைவர்கள் பலரும் தங்களது காரில் இருந்த சிவப்பு சூழல் விளக்குகளை அகற்றி வருகின்றனர்.

மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கு மே 1-ம் தேதி முதல் அகற்றப்பட உள்ளது.

விதிவிலக்கு

விதிவிலக்கு

அவசர கால ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீ தடுப்பு வாகனம் மற்றும் நீல வண்ண சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்மாதிரி

முன்மாதிரி

இந்த முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே தனது காரில் இருந்த சிவப்பு விளக்கை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டார். அதன்படி சிவப்பு விளக்கு அகற்றப்பட்ட காரில் அவர் பயணம் செய்தார்.

முதல்வர்

முதல்வர்

இதனையடுத்து, நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் இருந்த சிவப்பு விளக்கை அகற்றினார். அப்போது மத்திய அரசின் அறிவுரைப்படை சுழல் விளக்கு அகற்றப்பட்டதாக முதல்வர் கூறினார்.

ஆளுநர்

ஆளுநர்

இதனைத் தொடர்ந்து இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை இன்று அகற்றப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்கூட்டியே..

முன்கூட்டியே..

மே மாதம் 1ம் தேதியில் இருந்துதான் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்ற நிலையில், தலைவர்கள் பலர் தங்களது காரில் இருந்து சிவப்பு விளக்கை அகற்றி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu governor Vidyasagar rao today removed the red beacon light from his car.
Please Wait while comments are loading...