Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News: கிழக்கே அஸ்தமித்தது திராவிட சூரியன்.. அண்ணா அருகே மீளாதுயிலில் கருணாநிதி!

ராஜாஜி அரங்கத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- வீடியோ

    சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடலுக்கு முப்படை ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பிறகு, ஸ்டாலினிடம் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி வழங்கப்பட்டது. இதன்பிறகு, அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்பத்தார், கருணாநிதி உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Aug 08, 2018, 7:06 pm IST

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
    Aug 08, 2018, 7:05 pm IST

    சந்தனப்பேழையிலுள்ள கருணாநிதியின் உடல் நல்லடக்கம்

    21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார்

    கருணாநிதி குடும்பத்தார் கண்ணீர் அஞ்சலி

    தொண்டர்கள் வாழ்த்து முழக்கத்துடன் விடைபெற்றது உதய சூரியன்

    மீளா துயிலுக்கு சென்றார் சமூக நீதி காவலர்

    வழக்கத்திற்கு மாறாக இன்று கிழக்கே அஸ்தமித்தது சூரியன்

    Aug 08, 2018, 7:02 pm IST

    கருணாநிதிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை
    Aug 08, 2018, 6:54 pm IST

    கதறியழும் அழகிரி, ஸ்டாலின், செல்வி
    Aug 08, 2018, 6:53 pm IST

    தலையை வருடி விட்ட கனிமொழி
    Aug 08, 2018, 6:52 pm IST

    கருணாநிதியின் முகத்துக்கு முத்தம் தந்து மகள் கனிமொழி பிரியாவிடை
    Aug 08, 2018, 6:51 pm IST

    சந்தனப் பேழையில் கருணாநிதியின் காலைத் தொட்டு அழகிரி, ஸ்டாலின் கண்ணீர்
    Aug 08, 2018, 6:50 pm IST

    கருணாநிதியின் உடல் சந்தனப் பேழைக்கு மாற்றம்
    Aug 08, 2018, 6:49 pm IST

    தமிழர்களை மீளா துயரில் ஆழ்த்திவிட்டு மீளா துயில் கொள்கிறார் கருணாநிதி
    Aug 08, 2018, 6:45 pm IST

    இன்னும் சில நிமிடங்களில் மண்ணுக்குள் விதைக்கப்படுகிறது உதய சூரியன்

    தொண்டர்களின் கலைஞர் வாழ்க என்ன கோஷம் விண்ணை பிளக்கிறது

    Aug 08, 2018, 6:44 pm IST

    மு.க. ஸ்டாலின் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி
    Aug 08, 2018, 6:44 pm IST

    நண்பன் கருணாநிதிக்கு பேராசிரியர் அன்பழகன் கண்ணீர் இறுதி அஞ்சலி
    Aug 08, 2018, 6:43 pm IST

    டாக்டர் கலைஞர்.. டாக்டர் கலைஞர்.. தொண்டர்கள் உணர்ச்சி கோஷம்
    Aug 08, 2018, 6:38 pm IST

    மகன் தமிழரசு, கனிமொழி, காந்தி அழகிரி இறுதி அஞ்சலி

    முரசொலி செல்வம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் அஞ்சலி

    Aug 08, 2018, 6:37 pm IST

    கருணாநிதி உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி

    அழகிரி, ராசாத்தி அம்மாள் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி

    மகள் செல்வி, துர்கா ஸ்டாலின் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி

    Aug 08, 2018, 6:35 pm IST

    கருணாநிதி உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
    Aug 08, 2018, 6:30 pm IST

    கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் ராணுவ மரியாதை
    Aug 08, 2018, 6:30 pm IST

    தேவ கெளடா மலர் வளையம் வைத்து அஞ்சலி

    ஆளுநர் புரோகித் இறுதி அஞ்சலி

    Aug 08, 2018, 6:29 pm IST

    கருணாநிதி உடலுக்கு சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயக்குமாா் அஞ்சலி

    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குலாம் நபி ஆசாத் அஞ்சலி

    Aug 08, 2018, 6:29 pm IST

    மெரீனாவில் கருணாநிதி உடலுக்கு ராகுல் மலர் வளையம் வைத்து அஞ்சலி
    Aug 08, 2018, 6:26 pm IST

    கருணாநிதி இறுதி ஊர்வலம்: 3 கி.மீ தொலைவை கடக்க 2 மணி நேரம் ஆனது
    Aug 08, 2018, 6:24 pm IST

    கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை
    Aug 08, 2018, 6:22 pm IST

    சுமார் இரண்டரை மணி நேர இறுதி பயணத்திற்கு பிறகு மெரினா வந்தடைந்தது கருணாநிதி புகழுடல்
    Aug 08, 2018, 5:55 pm IST

    காமராஜர் சாலை சென்றடைந்தது கருணாநிதியின் இறுதி பயணம்

    தொண்டர்கள் வெள்ளத்தின் நடுவே மிதந்து செல்கிறார் காவியத் தலைவன்

    Aug 08, 2018, 5:50 pm IST

    வங்கக்கடல் ஓரம் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்

    வங்கக்கடலே வியக்கும் அளவுக்கு மனித கடல் அங்கே உருவாகியுள்ளது

    தான் திறந்து வைத்த பெரியார் சிலை, தான் பெயர் சூட்டிய அண்ணா, காமராஜர் சாலை வழியாக கருணாநிதி இறுதி பயணம்

    Aug 08, 2018, 5:44 pm IST

    அண்ணா சமாதி பகுதிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா வருகை
    Aug 08, 2018, 5:31 pm IST

    அண்ணா சமாதி பகுதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை
    Aug 08, 2018, 5:25 pm IST

    மெரினாவிற்கு ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் வருகை
    Aug 08, 2018, 5:18 pm IST

    தொண்டர்கள் கூட்டம் அலைமோதுவதால் கருணாநிதி இறுதி பயணம் படிப்படியாக நகர்ந்து வருகிறது

    பாசத்தலைவனை பிரிய மனமின்றி சாலைநெடுகிலும் மக்கள் வெள்ளம்

    ராணுவ வாகனம் மிக மெதுவாக மிதந்து செல்கிறது

    Aug 08, 2018, 5:03 pm IST

    அண்ணாசாலையை தாண்டி வாலாஜா சாலை சென்றடைந்தது கருணாநிதி இறுதி ஊர்வலம்
    READ MORE

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+