ப்ளூவேல் மூலம் தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குறிய குற்றம்- தமிழக அரசு
ப்ளூவேல் விளையாட்டை பகிர்வதோ அதன் மூலம் தற்கொலைக்கு தூண்டுவதோ தண்டனைக்கு உரிய குற்றம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ப்ளூவேல் தொடர்பான இணைப்புகளை பகிர்ந்தால் வழக்கு தொடரப்படும் என தமிழக டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப்ளூவேல் விளையாட்டை பகிர்வதோ அதன் மூலம் தற்கொலைக்கு தூண்டுவதோ தண்டனைக்கு உரிய குற்றம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ப்ளூவேல் விளையாட்டு அபாயகரமான விளையாட்டாக உள்ளது. இணையதளத்தில் இதனை விளையாடும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ரஷ்யாவில் தொடங்கிய ப்ளூவேல் கேம், உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. 3000 பேர் வரை இந்த விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டின் 50 நிலைகளைக் கடந்து செல்பவர்கள், தற்கொலை செய்து மரணித்து விடுகின்றனர்.

தமிழகத்தில் தற்கொலை
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இதுபற்றி விழிப்புணர்வை காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர் மீட்பு
கரூர் அருகே நடையனூரில் அரசு உதவி பெறும் பள்ளியல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் நடத்தையில் ஆசிரியருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து மாணவனை கண்காதித்து வந்துள்ளார் அந்த ஆசிரியர் அப்போது மாணவன் கையை கிழித்து ப்ளூவேல் படம் வரைந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசாரிடம் அந்த ஆசிரியர் புகார் அளித்து மாணவனை மீட்டனர்.

ஹைகோர்ட் மதுரை கிளை
ப்ளூவேல் கேமை பகிர்ந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரித்த நீதிமன்றம், பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டிஜிபி, உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டிஜிபி எச்சரிக்கை
ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக தவறான செய்திகளை ஆன்லைனில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவர்களின் நடவடிக்கையை பெற்றோரும், ஆசிரியர்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டு என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

ப்ளூவேல் தமிழக அரசு
இந்நிலையில் ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நம்பத்தகுந்த ஆதாரங்களின்றி ப்ளூவேல் கேம் குறித்த குறுந்தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ப்ளூவேல் தொடர்பான இணைப்புகளை பிறருக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

தண்டனைக்குரிய குற்றம்
இந்த விளையாட்டு மூலம் பிறரை தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சிறார்கள் ப்ளூவேல் கேம் விளையாடுவது தெரிந்தால் இணையம் போன்றவற்றை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் ப்ளூவேல் விளையாட்டை அதிகம் விளையாடுகின்றனர். சிறார்களின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறதா என்று கண்காணிக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications